ETV Bharat / state

'விவேகம்' பட உரிமை விவகாரம்; தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

சென்னை: அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வழங்கியதில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vivegam-movie-rights-issue
author img

By

Published : Sep 21, 2019, 8:49 PM IST

2017ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை மலேசியாவைச் சேர்ந்த டிஎஸ்ஆர் பட நிறுவனம், இப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் தியாகராஜனிடம் ரூ.4.25 கோடி கொடுத்து வாங்கியது.

ஆனால், இப்படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்திற்கு வழங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறி, சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக பங்குதாரருக்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த டிஎஸ்ஆர் பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி சென்னை காவல்துறை ஆணையரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

vivegam-movie-rights-issue-court-order-to-register-case-against-producer
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிய உத்தரவு

அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக பங்குதாரர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மலேசிய நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்தரம் உள்ளது எனக் கூறி, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க...

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் மூன்று தமிழ்ப்படங்கள்!

Intro:Body:நடிகர் அஜித் நடித்த "விவேகம்" படத்தின் வெளிநாட்டு உரிமையை வழங்கியதில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த "விவேகம்" திரைப்படத்தின்
மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியிடும் உரிமையை மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். படநிறுவனம், அப்படத்தை தயாரித்துள்ள சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் தியாகராஜனிடம் ரூ.4.25 கோடி கொடுத்து வாங்கியது.

ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறி, சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக பங்குதாரருக்கு எதிராக, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். படநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி சென்னை காவல்துறை ஆணையரிடம் கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளித்தார்.

அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக பங்குதாரர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மலேசிய நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்தரம் உள்ளது எனக் கூறி, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.