ETV Bharat / state

ஜிஎஸ்டி நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாக கூறி ரூ.1 கோடி மோசடி: விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது - ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகார்

ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாக கூறி ரூ.1 கோடி ரூபாய் மோசடி செய்ததாக விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஷ்வ இந்து பரிசத் நிர்வாகி கைது
விஷ்வ இந்து பரிசத் நிர்வாகி கைது
author img

By

Published : Apr 6, 2022, 4:59 PM IST

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ரம்யா அவுட்சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரம்யா அவுட் சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் மேன்பவர் அவுட்சோர்சிங் தொழில் செய்து வருகிறேன். இந்த நிறுவனம் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

இந்த நிறுவனத்திற்கு மார்ச் 2021இல் ஜிஎஸ்டி சம்பந்தமாக சோதனை செய்ய உயர் அலுவலர்கள் வந்தனர். 2017-18 மற்றும் 2019-20 நிதி ஆண்டில் 4.75 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடித்தனர்.

அந்த தொகையை உடனடியாக செலுத்த நோட்டீஸ் கொடுத்து சென்றனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஆடிட்டர் மோகன் பாபுவை இதுசம்பந்தமாக அணுகினேன். அப்போது தணிகைவேல் என்பவர் தன்னிச்சையாக அறிமுகமாகி தனக்கு வருமானவரித்துறை அலுவலகத்தில் உயர் அலுவலர்களைத் தெரியும் என்று கூறி நம்ப வைத்தார். நிறுவனத்திற்கு கொடுத்த நோட்டீஸை ரத்து செய்ய வைப்பதாக கூறினார்.

ரூ.1 கோடி மோசடி: இது சம்பந்தமாக சென்னையில் உள்ள வருமானவரித்துறை கமிஷனர் தீபக் கோதாரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி 22.3.2021ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நோட்டீஸை ரத்து செய்வதாக கூறினார். இதனை நம்பி தணிகைவேல், தீபக் கோத்தாரி மற்றும் அவரது மகன் பிரசாத் கோத்தாரி ஆகியோரிடம் பல்வேறு தேதிகளில் ஒரு கோடி ரூபாய்வரை பணம் கொடுத்தேன்.

பணம் கொடுத்த பிறகும் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இருந்து தொடர்ச்சியாக நோட்டீஸ் வந்தது. இதனால் சந்தேகமடைந்து செல்போன் மூலம் தீபக் கோதாரியை தொடர்பு கொண்டு விசாரிக்க முயன்றேன்.

ஆனால் தீபக் கோத்தாரி ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். எனவே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கையை எடுத்து என்னுடைய பணத்தை பெற்றுத் தர வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது: இதையடுத்து நங்கநல்லூரைச் சேர்ந்த தணிகைவேல், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் கோத்தாரி ஆகிய இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபக் கோத்தாரி தான் வருமானவரித்துறை கமிஷனர் எனக் கூறி ஏமாற்றிதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.

மேலும், கைதான தணிகைவேல் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தென்சென்னை மாவட்ட இணை செயலாளராக இருந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கைதான இரண்டு பேரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.