சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து விஷாலின் 32ஆவது திரைப்படத்தில் இளைய திலகம் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
வித்தியாசமான கதை அம்சம்கொண்ட இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக சுனைனா நடித்துவருகிறார். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தங்களது ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இன்னும் பெயரிடாத இப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிகர் பிரபு நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஸ்லிம்மாகப் படத்தில் நடிக்கும் பிரபுவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கும் பிரபுவைப் பார்த்து ரசிகர்கள் செம ஷாக்காகினர்.
ஏற்கனவே தாமிரபரணி, ஆம்பள படங்களில் விஷாலும், பிரபுவும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க:காதலனுடன் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்