கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக, அனைத்து விதமாக படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புத் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு திரைப் பிரபலங்கள் நிதி, பொருள்கள் வழங்கியும் அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். இதனையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சென்னையைச் சேர்ந்த சுமார் 1,500 பேருக்கு, ஒரு மாதத்திற்கான மளிகைச் சாமான்களை நடிகர் விஷால் கொடுத்துள்ளார்.
![Vishal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-corona-actorvishal-script-7204954_12042020161223_1204f_1586688143_742.jpeg)
இந்த நிவாரண பொருள்களை இன்று நடிகர் ஶ்ரீமன், தளபதி தினேஷ் ஆகியோர் உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளனர். சென்னை மட்டுமின்றி வெளியூர் உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்துவருகின்றனர். தொடர்ந்து 300 திருநங்கைகளுக்கும், பலசரக்கு பொருள்கள் வழங்கப்பட்டன.
![Vishal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-corona-actorvishal-script-7204954_12042020161223_1204f_1586688143_260.jpeg)
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கையுறை, முகக் கவசங்களும் வழங்கப்பட்டுள்ளது.