ETV Bharat / state

தனியார் கல்லூரியில் சுவர் சித்திரம் வரையும் போட்டி: மாணவிகள் அதிகளவில் பங்கேற்பு - காட்சித் தொடர்பியல்

சென்னை: காட்சி தொடர்பியல் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சுவர் சித்திரம் வரையும் போட்டியில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

wall painting competition  மீனம்பாக்கம் சுவர்சித்திரம் வரையும் போட்டி  சுவர் சித்திரப் போட்டி  காட்சித் தொடர்பியல்  மாணவர்களால் வரையப்பட்ட சுவர் சித்திரம்
மாணவர்களால் வரையப்பட்ட சுவர் சித்திரம்
author img

By

Published : Feb 24, 2020, 2:11 PM IST

காட்சித் தொடர்பியல் குறித்து மக்களுக்கு தெரியச் செய்திடும் வகையில் சுவர் சித்திரம் வரையும் போட்டி மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், சென்னையிலுள்ள எட்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சுவர் ஓவியம் வரைந்தனர்.

அந்தக் கல்லூரியின் சுற்றுச்சுவரில் 'இயற்கையும் சமுதாயமும்' என்ற தலைப்பில் மாணவர்கள் சித்திரம் வரைந்தனர். இயந்திரமயமான காலக் கட்டத்தில் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கும் இப்போது, இதுபோன்ற சுவர் சித்திரங்களை நின்று பார்க்கும்போது அது நேர்மறையான சிந்தனையை பார்ப்போருக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

மாணவர்களால் வரையப்பட்ட சுவர் சித்திரம்

இதுகுறித்து போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், சுவர் சித்திரம் வரைந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர். இந்தப்போட்டியை ஒருங்கிணைத்த பேராசிரியர் மோஸஸ் இதுகுறித்து பேசுகையில், "இப்போட்டியில் 8 கல்லூரிகளைச் சேர்ந்த 34 மாணவர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக மாணவிகள் இப்போட்டியில் அதிகளவில் பங்கேற்றனர்" என்று குறிப்பிட்டார்.

சுவர் சித்திரப் போட்டியை ஒருங்கிணைத்த பேராசிரியர் மோஸஸ்

இதையும் படிங்க: இடிக்கப்படவுள்ள 120 ஆண்டுகள் கண்ட பள்ளி - நினைவுகளில் திளைத்த முன்னாள் மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.