ETV Bharat / state

விருகம்பாக்கம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் கல்வீச்சு - virukambakkm

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவின் கார் மீது கற்கள் வீசப்பட்டதால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கார் மீது கல்வீச்சு.
கார் மீது கல்வீச்சு.
author img

By

Published : Mar 13, 2021, 9:07 AM IST

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை கேகே நகர், ராமசாமி தெருவில் வசித்து வருகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கே.கே நகர் 12வது செக்டார் பகுதியில் வசித்து வரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரனை சந்திக்கச் சென்றார். அப்போது பிரபாகர் ராஜா தனது காரில் ஆதரவாளர்களுடன் தனசேகரன் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், தனசேகரனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்காததால் அங்கிருந்த தனசேகரனின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது திடீரென பிரபாகர் ராஜா கார் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும், உடன் வந்திருந்த பகுதி செயலாளர் கண்ணனின் கார் மீதும் கற்களை வீசி கண்ணாடியை உடைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, பிரபாகர் ராஜா தனது காரிலேயே வீட்டிற்குத் திரும்பிச் சென்று விட்டார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற கே.கே நகர் காவல்துறையினர், தனசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும், அவரது வீட்டைச் சுற்றி காவல் துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரபாகர் ராஜா எந்த விதமான புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த பறக்கும் படை - ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.