கரோனா பரவலால் நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி முழு உரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்புப் பிரிவிற்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 447 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பாக வந்துள்ளன.
அதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 372 புகார்களை சமாதானமாக தீர்த்து வைத்திருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 75 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகமாக புதுகோட்டை மாவட்டத்திலிருந்து ஆயிரத்து 424 புகார்கள் வந்துள்ளன. சென்னையிலிருந்து வெறும் 45 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. அதனோடு, சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்ததற்காக ஐடிபி சட்டத்தின் கீழ் காவல்துறையினர் 17 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 ஆண்களும் 17 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 15 அதிரடி ரெய்டுகளும் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் போக்சோ சட்டத்தின் கீழ் 360 வழக்குகள் பதியப்பட்டு, 372 குற்றவாளிகள் செய்யப்பட்டும், இளம் சிறார் சட்டத்தின் கீழ் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பெண் ஆய்வாளர்களுக்கு நாளை (ஜூன் 24) முதல் இரண்டு நாள்கள் பயிற்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மோதல்களுக்கு இடையே எல்லைகளை வலுப்படுத்தும் இந்திய அரசு!