ETV Bharat / state

உலகப்போரில் பயன்படுத்திய கார்கள் மக்கள் பார்வைக்கு! - vintage car show in chennai

சென்னை : தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் என்ற அமைப்பு சார்பில் உலகின் பழமையான கார்கள், மோட்டார் வாகனங்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

vintage car show in chennai
உலகப்போரில் பயன்படுத்திய கார்கள்
author img

By

Published : Jan 10, 2021, 5:39 PM IST

தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் என்ற அமைப்பு 'தி சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ டிஸ்ப்ளே 2021' என்ற தலைப்பில் சென்னையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க கார்களும் 25க்கும் மேற்பட்ட மிகப்பழமையான இருசக்கர வாகனங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

19ஆவது ஆண்டாக நடக்கும் இந்நிகழ்வை ஏடிஜிபி விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்த கார்கள், மோட்டார் வாகனங்களை அவர் பார்வையிட்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "வழக்கமாக சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வாகனப் பேரணியாக இந்நிகழ்வு நடக்கும். ஆனால் கரோனா பரவல் காரணத்தினால் கார்களை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். 1926ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கார்களில் இருந்து அனைத்து கார்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப் பழமையான வாகனங்கள் டிஸ்ப்ளே நிகழ்ச்சி

சென்னை மக்கள், கிளாசிக் கார்களை இந்நிகழ்ச்சியில் பார்க்கலாம். இது சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. உலகப் போரில் பயன்படுத்திய கார்கள், பிரபலமான தனியார் நிறுவனம் முதன்முதலில் அறிமுகப்படுத்திய கார்கள் என அனைத்து கார்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க... பொழுதைக் பயனுள்ளதாக மாற்ற எழும்பூர் அருங்காட்சியம் வாருங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.