சென்னை பெரம்பூரில் 20 ஆண்டுகள் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூர்ண சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த மூன்று நாட்களாக யாக சாலையில் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு கங்கையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏப்ரல் 19ஆம் தேதி காலை கணபதி ஹோமம் பூஜை, நவக்கிரக ஹோமம், தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு கடந்த மூன்று நாட்களாக யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
மூன்று நாட்களாக நடந்துவந்த யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து நான்காம் நாளாக பூஜையில் மகா பூர்ணாஹுதி நிறைவுபெற்றது. இதனையடுத்து புனிதநீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் ஏந்தி கேரள செண்டை-மேளத்துடன் வீதியில் நடந்துவந்தனர்.
பின்னர் பூரண சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ராஜ கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.