ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா அளித்த பேட்டியில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து காய், கனி, மலர் சந்தைகளை மீண்டும் கோயம்பேடுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
காய்கறி சந்தை உடனடியாக திருமழிசையில் இருந்து மாற்றப்பட வேண்டும். இந்த மாத இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் காய்கறி சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்படும் என நம்புகிறோம். இதனை அரசு ஏற்றுக்கொண்டு, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்தப் பணிகள் தாமதமானால் வணிகர்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்படும்.
முதற்கட்டமாக மொத்தவிலை சந்தையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். அதற்கு அடுத்தபடியாக சில்லறை விற்பனையை அனுமதிக்கலாம். தற்போது மதுபானக் கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன் வழங்கப்படுகின்றன. கோயம்பேடு மளிகை விற்பனை சந்தையில் மொத்தமாக 500 நபர்கள் கூட இருக்கமாட்டார்கள். இதனை அரசு ஏன் திறக்க மறுக்கிறது. மதுபானங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு வணிகர்களுக்கு கொடுக்குா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் காய்கறி சந்தைகளை பழைய இடங்களுக்கே மாற்ற வேண்டும் என அரசிடம் கோரிக்க வைத்திருக்கிறோம். கரோனா காரணமாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து வேலையின்றி தவித்துவருகின்றனர். வியாபாரிகளை சார்ந்து ஒன்றரை லட்சம் குடும்பங்கள் உள்ளன. மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக முடக்கிவைத்திருப்பதால் வியாபாரிகள் உணவுக்கு கூட வழியின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க:மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்!