சென்னை: 2011ஆம் ஆண்டு சீமான் மீது புகார் அளித்திருந்த விஜயலட்சுமி, மீண்டும் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப் படை அமைப்பு தலைவர் வீரலட்சுமி பேசி வந்தார்.
இந்தநிலையில், சீமான் மீது அடுக்கடுக்கானப் புகார்களை கூறிய நடிகை விஜயலட்சுமி, கடந்த வாரத்தில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். அதைத் தொடர்ந்து, விஜயலட்சுமி விவகாரம் முடிந்த நிலையில், தற்போது சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே காரசாரமாக சவால்கள் மற்றும் பதில்கள் இணையத்தில் பரவிக் கொண்டு வருகிறது.
மேலும், சீமான் அண்மையில் வீரலட்சுமியைப் பற்றி பேசி வந்தார். அப்போது வீரலட்சுமியின் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயார் என கூறிய சீமானுக்கு, இடத்தைத் தேர்வு செய்து தேதியும் குறித்து நாங்க ரெடி என தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி கூறியிருந்தார்.
இதையும் படிங்க: “பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வரக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை கட்சித் தலைவர் வீரலட்சுமி கேவலமாக அரசியல் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சீமானுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வீரலட்சுமி, அவருடன் பேசி தன்னுடைய பிரச்னையை தீர்த்து வைத்திருக்கலாம்.
ஆனால், அதை செய்யாமல் இப்போது சீமானை பாக்ஸிங் கூப்பிட்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார். நான் சென்னையில் இருந்தபோது வீரலட்சுமி எனக்கு கொடுத்த டார்ச்சரால் உயிர் போகும் நிலை ஏற்பட்டது. சாட்டை துரைமுருகனிடம் உதவி கேட்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது வீரலட்சுமி கேவலமான அரசியல் செய்து வருகிறார். சீமானை பாக்ஸிங் கூப்பிட்டு இடத்தை தேர்வு செய்து உள்ளார் இவரெல்லாம் என்ன சமூக சேவையில் உள்ளார் என தெரியவில்லை. வீரலட்சுமி விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காமெடி செய்து கொண்டு கணவரை வைத்து விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். தனது கஷ்டமான காலத்தை வீரலட்சுமி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? - சீமான் கேள்வி