சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிச.28-ஆம் தேதி காலை உயிரிழந்தார். பின்னர் தீவுத்திடலில் அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு, கோயம்பேடு அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை விஜயகாந்த் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
-
இந்த இக்கட்டான நேரத்தில், @AmitShah ji உங்களின் ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் எனக்கும் , எங்கள் கழகத்தினருக்கும் , குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. pic.twitter.com/rqj4fxFP3Y
— Premallatha Vijayakant (@imPremallatha) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்த இக்கட்டான நேரத்தில், @AmitShah ji உங்களின் ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் எனக்கும் , எங்கள் கழகத்தினருக்கும் , குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. pic.twitter.com/rqj4fxFP3Y
— Premallatha Vijayakant (@imPremallatha) January 11, 2024இந்த இக்கட்டான நேரத்தில், @AmitShah ji உங்களின் ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் எனக்கும் , எங்கள் கழகத்தினருக்கும் , குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. pic.twitter.com/rqj4fxFP3Y
— Premallatha Vijayakant (@imPremallatha) January 11, 2024
விஜயகாந்த் உயிரிழந்தது அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், திரையுலகினர், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் நினைவாக அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த்தின் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தின் பெயரை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது.
முன்பு விஜயகாந்த் என்று இருந்த எக்ஸ் பக்கத்தின் பெயரை, தற்போது பிரேமலதா விஜயகாந்த் என மாற்றியுள்ளார். மேலும் புதிதாக மாற்றப்பட்டுள்ள சமூக வலைத்தளப் பக்கத்தின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளது என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், நியூமராலஜிபடி பெயரை மாற்றியிருக்கலாம் என பிரேமலதாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் உயிரிழந்த சில நாட்களில், அவரது எக்ஸ் பக்க பெயர் மாற்றப்பட்டது பொதுமக்களிடையே சலசலப்பை எற்படுத்தியுள்ளது. முன்னதாக விஜயகாந்த் கடைசியாக பங்கேற்ற தேமுதிக கட்சி பொதுக்குழு கூட்டத்தில், பிரேமலதா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போகி பண்டிகை; சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிவாசிகளுக்கு முக்கிய வேண்டுகோள்!