சென்னை: தேமுதிக- அதிமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவியதால் இன்று ( மார்ச் 9) தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சென்னை கோயம்பேடில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் அவரச ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்தக்கூட்டத்தில், தங்களது மாவட்டத்தின் களநிவலவரங்கள் குறித்து விஜயகாந்திடம் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல் கே சுதீஷ், ப.பார்த்தசாரதி எஸ்.அக்பர், எஸ். சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’தேமுதிகவின் விருப்பம் என்னவென்று தெரியாது' - சி.டி.ரவி