ETV Bharat / state

ஆம்புலன்ஸ் வருகையை அறிய புதிய செயலி! - 108 Ambulance Introduces New app

சென்னை : ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி (Mobile App) ஒன்று உருவாக்கப்பட்டுவருகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar
author img

By

Published : Feb 20, 2020, 8:29 PM IST

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பரிசோதித்துள்ளோம்.

தமிழ்நாட்டில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பலில் இருந்த 19 சீனர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது பின்பு, அவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிக்கபட்ட பகுதியிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் இரத்த மாதிரிகளை சோதனை செய்கிறோம். பொதுமக்கள் பீதி அடையத் தேவை இல்லை.

’விரைவில் புதிய செயலி’

108 ஆம்புலன்ஸ் சேவையில் 200 புதிய ஆம்புலன்ஸ்கள் இந்த ஆண்டு கூடுதலாக இணைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் சேவை தரம் வாய்ந்ததாக உள்ளது. சென்னை நகரில் 8.2 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 13.5 நிமிடங்களிலும், மலைப்பகுதியில் 16.5 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது.

விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை அமைச்சர்

ஒரே விபத்துக்கு பல்வேறு அழைப்புக்கள் வருவதை தடுக்கும் வகையில் ஓலா, உபர் போன்று ஆம்புலன்ஸ் எந்த இடத்தில்வருகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி (Mobile App) ஒன்று உருவாக்கப்பட்டுவருகிறது. விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.'' என்றார்.

இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால் உயிரிழந்த மாணவன்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.