ETV Bharat / state

பணிக்குத் திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம் - விஜய பாஸ்கர் எச்சரிக்கை!

சென்னை: மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் நாளை முதல் அவர்களுக்கு பதில் வேறு மருத்துவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

doctor protest press meet
author img

By

Published : Oct 30, 2019, 10:49 PM IST

சென்னையில் அரசு அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆலோசனை பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சங்கத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். அவர்கள் இன்று முதல் பணிக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்பு ஒரு சில மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்.

அரசைப் பொறுத்தவரை நோயாளியின் நலனே முக்கியமாகக் கருதுகிறோம். எனவே நோயாளிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்காது. இவ்வாறு போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. ஆறு நாள்கள் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நாளை பணிக்குத் திரும்ப வேண்டும்.

நாளை பணிக்குத் திரும்பாவிட்டால் மதியம் இரண்டு மணிவரை பணிக்கு வராத மருத்துவர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு பணி நிறுத்தம் அளிக்கப்படும். அந்தப் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். பின்னர் அவர்களுக்குப் பதில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஏற்கனவே தகுதியான மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அவர்களைக் கொண்டு உடனடியாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தற்போதும் போராட்டத்தில் இருப்பவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். மேலும், போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களை அழைத்துப் பேச அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மருத்துவர்கள் போராட்டம் கண்டிக்கத்தக்கது' - திருநாவுக்கரசர்

Intro:மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம்

விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Body:மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம்

விஜயபாஸ்கர் எச்சரிக்கை
சென்னை,
மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் நாளை முதல் அவருக்கு பதில் வேறு மருத்துவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் அரசு அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கத்துடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பி விட்டனர்.

ஆனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்பு ஒரு சில மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளில் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அரசைப் பொறுத்த வரை நோயாளியின் நலனே முக்கியமாக கருதுகிறோம்.

நோயாளிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்காது. நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல.

ஆறு நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாளை பணிக்கு திரும்பவேண்டும். நாளை பணிக்கு திரும்பாவிட்டால் மதியம் 2 மணிவரை பணிக்கு வராத அவர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்படும். அந்த பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். அவர்களுக்கு பதில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
நாளைக்கு பணிக்கு திரும்பாதவர்களுக்கு பிரேக்கிங் சர்வீஸ் அளிக்கப்படும்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஏற்கனவே தகுதியான மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களைக் கொண்டு உடனடியாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
தற்பொழுதும் போராட்டத்தில் இருப்பவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும். போராட்டத்தைக் கைவிட்டார் அவர்களை அழைத்து பேச அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.