ETV Bharat / state

ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.1 கோடி நன்கொடை; விஜய்சேதுபதி ராக்ஸ்! - Fepsi workers

நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது பொதுவெளியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி ராக்ஸ்!
விஜய்சேதுபதி ராக்ஸ்!
author img

By

Published : Oct 3, 2021, 8:02 PM IST

சென்னை: முன்னர் கரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக திரைத்துறை பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. திரைத்துறையையே சார்ந்து பிழைத்த தினசரி தொழிலாளர்கள் உணவுத்தேவையை சமாளிக்கவே அல்லல்படும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து 'ஃபெப்சி' என அழைக்கப்படும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஊரடங்கு காரணமாக நெருக்கடியைச் சந்தித்துவரும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு முடிந்தளவிலான உதவிகளை செய்து வருகிறது.

நன்கொடை அளித்த விஜய்சேதுபதி

இந்த அமைப்பின் முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபல நடிகர்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக ரூ. 1 கோடியை இன்று (அக்.3) நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கான காசோலையை ஃபெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதி நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.