நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய் அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்க உள்ளது.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் 66ஆவது படத்தை யார் இயக்குவார் என்று பேச்சு எழுந்து வருகிறது. விஜய்யும் தற்போதுள்ள இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாதவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரின் 66ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கியவர். தற்போது அஜீத்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஹெச்.வினோத்திடம் விஜய் கதை கேட்டதாகவும் அவரும் ஒரு அரசியல் கதையை கூறியதாகவும் விஜய்க்கும் அக்கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே விஜய்யின் 66ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
முன்னதாக விஜய்யின் படத்தை இயக்க சிறுத்தை சிவாவிற்கு வாய்ப்பு வந்ததாகவும் அவர் அண்ணாத்தே, சூர்யாவின் படம் என பிஸியாக இருப்பதால் இயக்க முடியாமல் போனதால் அவர்தான் விஜய்யிடம் ஹெச்.வினோத்தை சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:உலக அளவில் வசூலில் முதலிடம் - மாஸ்டர் தி பிளாஸ்டர்!