ETV Bharat / state

மக்கள் தளபதி விஜய்... பொதுமக்களிடம் குழப்பம் - விஜய் மக்கள் இயக்கம்

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்கள் தளபதி என எழுப்பிய கோஷம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

vijay
vijay
author img

By

Published : Nov 4, 2020, 12:53 PM IST

வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதி அண்ணா நகரில் 'விலையில்லா விருந்தகம்' என்ற பெயரில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தினமும் 100 பேருக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (நவம்பர் 4) முதல் விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், குளத்தூர் மேற்கு பகுதி தலைவர் எம்டிசிஎன் தனிகா, ஆர்கே நகர் பகுதி வட்ட பொறுப்பாளர்கள் மேற்கெண்டனர். இன்று முதல் ஒரு வருடத்திற்கு தினமும் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் கோஷம்

இதில் கலந்துக்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்கள் தளபதி என்ற கோஷத்தை எழுப்பியவாறு பொதுமக்களுக்கு உணவினை வழங்கினர்.

இந்த கோஷத்தால் விஜய் அரசியலுக்கு வருவாரா? அதன் முதல் படியாக இந்த இலவச உணவா என பொதுமக்கள் மத்தியில் குழப்பங்கள் நிறைந்த கேள்வியெழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.