கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் லைகர் (LIGER) திரைப்படத்தில், தெலுங்கு திரையுலகின் இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துவருகிறார்.
இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கப்பட்டு, வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்குகொள்ளும் முக்கிய அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.
பல மொழிகளில் உருவாகும் ’லைகர்’
இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்சன் த்ரில்லர் திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா ஆர்ட்ஸ் கலைகளில் சிறப்புப் பயிற்சிப் பெற்று நடித்துவருகிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக நடிக்கிறார்.
இதனை பியூரி கனெக்ட்ஸ், பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடெக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் லைகர் (LIGER) திரைப்படம், இந்திய அளவில் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுவருகின்றது. விஷ்ணு சர்மா ஒளிப்பதிவினைக் கவனிக்க, தாய்லாந்தைச் சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர் கெச்சா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
படப்பிடிப்புத் தளத்துக்கு பாலையா ’விசிட்’
ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்டோர் மிக முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோரே தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரசிம்மா நந்தமூரி பாலகிருஷ்ணா, திடீரென படப்பிடிப்புத் தளத்திற்கு விசிட் அடித்து படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அகண்டா (Akhanda) படத்தின் படப்பிடிப்பும் கோவாவுக்கு அருகிலேயே நடைபெற்றுவருகிறது.
அப்போது படத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த பிரமாண்ட படப்பிடிப்பு செட்டை பார்வையிட்ட பாலகிருஷ்ணா, தயாரிப்பாளர்களை வெகுவாகப் பாராட்டினார்.
அப்போது விஜய் தேவரகொண்டாவின் வித்தியாச 'லுக்' தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார். இதன் காரணமாக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!