தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் தங்களது வாக்கினைப் பதிவுசெய்து-வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் வந்து தனது வாக்கைப் பதிவுசெய்தார்.
வீட்டிலிருந்து வாக்கு செலுத்தும் இடத்திற்குச் சைக்கிளில் விஜய் வந்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைப் பின்தொடர்ந்து, ஏராளமான ரசிகர்கள் வாகனங்களில் வந்தனர்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றினார் சூப்பர் ஸ்டார்