சென்னை: 104 மருத்துவ சேவை உதவி மையத்தின் மூலம் மனநல ஆலோசகர்களைக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அபபோது மாணவர்களிடையே அவர் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 7.5 இட ஒதுக்கீடு இந்த வருடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல ரிஸல்ட் வரும், மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நீட் தேர்வு முடிவடைந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம், மாணவர் மன நல கவுன்சிலிங் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
1,42,786 மாணவர்களுக்கு நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. 17000 மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கான ஆலோசனையை துவங்கி உள்ளோம். 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் 555 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் 1,42,786 மாணவர்களுக்கு அவர்களது மன நலத்தை கவுன்சிலிங் மூலம் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீட் விலக்கு குறித்து இந்த அரசு ஒரே மன நிலையில் தான் இருக்கிறது" என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஓர் ஆண்டுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் Happy streets என்னும் நிகழ்ச்சியில் மருத்துவ முகாம்கள் அமைப்பது குறித்து சென்னை மேயரை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். காலை 6 மணி முதல் 9 மணி வரை அந்த மருத்துவ முகாம்கள் செயல்படவுள்ளது.
குரங்கம்மை நோய் தடுப்புக்காக, தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமானங்களில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இருக்கிறதா என சுகாதார துரை சார்பில் முகாம்கள் அமைக்கபட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை நான் கோவை விமான நிலையத்தில், குரங்கம்மை நோய் கண்காணிப்பு முகாம்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலினின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் பின்னணி என்ன?