ETV Bharat / state

"யேப்பா ஐ.எஸ்.ஏ போலீஸா.. இங்க வா" என லஞ்சம் கொடுத்த திமுக நிர்வாகி! - chennai

பெருங்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உளவுத்துறை காவல்துறை அதிகாரியே லஞ்சம் வாங்கும், வீடியோ வெளியாகியுள்ளது.

"யேப்பா ஐ.எஸ்.ஏ இங்க வா": என லஞ்சம் கொடுத்த திமுக நிர்வாகி!

author img

By

Published : Jan 12, 2023, 10:15 PM IST

திமுக பொதுக்கூட்டத்தில் காவல்துறையே லஞ்சம் வாங்கும், உளவுத்துறை போலீஸ் வீடியோ

சென்னை: பெருங்குடியில் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம், சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், பெருங்குடி மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். கூட்டம் முடிந்த பின்பு கலந்து கொண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அனைத்தும் முடிந்த பிறகு துரைப்பாக்கம் உளவுத்துறை போலீஸ் கண்ணன் என்பவருக்கு திமுக பகுதி செயலாளரும், பெருங்குடி மண்டலத் தலைவருமான ரவிச்சந்திரன், "யேப்பா ஐ.எஸ்.ஏ போலீஸா... இங்கே வா" என்று கூப்பிட்டு, அவருக்கு 500 ரூபாய் தாள்களை லஞ்சமாக அள்ளிக் கொடுத்தார். அவரும் அனைத்து போலீசார் முன்னிலையிலும் பணத்தை புன்னகையுடன் வாங்கிக்கொண்டு, கால் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

காவல் துறையினர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும் உளவுத்துறை போலீசாரை நியமித்தால், அவரே இப்படி லஞ்சம் வாங்கினால் அவரை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுகிறது. பணம் வாங்கிய உளவுத்துறை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுக்கிறது. அதே போல் நலத்திட்ட உதவிகளை வாங்கிக் கொண்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறி சரக்கு வாகனத்தில் பெண்கள் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க: கண் இமை போல் உலகெங்கும் வாழும் தமிழ் இனத்தைக் காப்பேன்: முதலமைச்சர் சத்தியம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.