ETV Bharat / state

சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்த விக்டோரியா கெளரி உட்பட ஐவர் நீதிபதிகளாக நியமனம்

சிறுபான்மையினர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்ப்புகளை தாண்டி விக்டோரியா கெளரி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு!

author img

By

Published : Feb 6, 2023, 4:36 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள்

சென்னை: கடந்த ஜனவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் கூடியது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. அதில் பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லஷ்மி நாராயணன், லக்‌ஷ்மண சந்திர விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கறிஞர்களான விக்டோரியா கெளரி, பாலாஜி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி மற்றும் திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ள நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது. முன்னதாக சிறுபான்மையினர் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக வழக்கறிஞர் விக்டோரியா கெளரி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Victoria Gouri: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்க ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.