ETV Bharat / state

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு துணைவேந்தர்கள் ஊக்கமளிக்க வேண்டும்... ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Aug 28, 2022, 5:27 PM IST

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை துணைவேந்தர்கள் உத்வேகம் அளித்து சாதிக்க ஊக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

2047ல் விளையாட்டில் சிறந்த நாடாக இந்தியா மாற வேண்டும்... ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: 2047இல் விளையாட்டில் சிறந்த நாடாக இந்தியா மாற வேண்டும்; அதில் தமிழ்நாட்டின் பங்கும் அதிகளவில் இருக்க வேண்டும் எனவும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை துணைவேந்தர்கள் உத்வேகம் அளித்து சாதிக்க ஊக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

ஒலிம்பிக், பாராலிம்பிக், செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், மாரியப்பன் தங்கவேலு, பவானி தேவி, சதீஷ் குமார், ஜோஷ்னா சின்னப்பா, சத்யன் ஞானசேகரன், கார்த்திகேயன் முரளி, வைஷாலி உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, '2008இல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அரசின் சார்பில் சென்றிருந்தேன். இறுதியாக ஒரே ஒரு தங்கம் மட்டுமே கிடைத்தது. அது தனிப்பட்ட விதத்தில் எனக்கு வலியாகவே இருந்தது. எதிர்பாராத விதமாக அப்போது விளையாட்டுத்துறை என்பது வாரிசுகளின் வசம் சிக்கியிருந்தது. மக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. 2 முதல் 3 தலைமுறையைச்சேர்ந்த கூட்டமைப்பினர் சுற்றுலாவாக பெய்ஜிங் வந்திருந்தனர்.

தற்போது நம்பிக்கையானவர்கள் வருவது அதிகரித்து வருகிறது. நீங்கள் நாட்டுக்காக என்ன சேவை செய்கிறீர்கள் என உங்களுக்குத் தெரிவதில்லை. நாட்டில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உத்வேகத்தையும் தருகிறீர்கள். நாட்டைப் பெருமைப்படுத்துகிறீர்கள். 2047இல் விளையாட்டில் சிறந்த நாடாக இந்தியா மாற வேண்டும்.

அதில் தமிழ்நாட்டின் பங்கும் அதிகளவில் இருக்க வேண்டும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை துணைவேந்தர்கள் உத்வேகம் அளித்து சாதிக்க ஊக்கமளிக்க வேண்டும். மாநிலத்தில் இருந்து சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு ஆளுநர் தனியாக அழைத்துப் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல் முறையாகும்’ என்றார்.

இதையும் படிங்க:புறநானூறு, தொல்காப்பியத்தை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.