ETV Bharat / state

புதிய துணைவேந்தருக்காகத் தேடுதல் குழு - டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்காக, தேடுதல் குழு அமைக்கக்கோரி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Vice chancellor  Vice chancellor search committee  dr mgr medical university  mgr medical university  medical university  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  துணைவேந்தர்  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்  துணைவேந்தர் தேர்வு
துணைவேந்தர்
author img

By

Published : Oct 9, 2021, 10:02 AM IST

Updated : Oct 9, 2021, 11:16 AM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வுசெய்வது குறித்து ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சுதா சேஷய்யன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்பட்ட அறிவிக்கப்படுகிறது.

Vice chancellor  Vice chancellor search committee  dr mgr medical university  mgr medical university  medical university  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  துணைவேந்தர்  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்  துணைவேந்தர் தேர்வு
ராதாகிருஷ்ணன்

புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவின் அரசு உறுப்பினர், குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் பூரணலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மைசூர் ஜே.எஸ்.எஸ். அகாதமி ஆஃப் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (JSS Academy of Education and Research) இணைவேந்தர் சுரேஷ், ஶ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் தணிகாசலம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்கான குழு விண்ணப்பங்களைப் பெற்று மூன்று பேர் கொண்ட பட்டியலை பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான வி.என். ரவிக்கு அளிப்பர். அதிலிருந்து புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்து தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு நியமனம் செய்வார்.

இதையும் படிங்க: வேலூரில் பதற்றமான இடங்களில் கண்காணிப்பு

Last Updated : Oct 9, 2021, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.