ETV Bharat / state

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Heavy rain Alert: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 9:16 AM IST

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.14) காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன முதல் மிக கனமழை பெய்யும் பகுதி: தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவாட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பொழியும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கூடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: மழையின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மழை நீர் தேக்கம், மழை காரணமாக மரங்கள் முறிவு மற்றும் ஏரி, குளத்தில் நீர் நிறைய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைப் பதிவு: நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பெய்த மழைப்பொழிவின் அளவை மிமீ அளவீட்டில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் நாகப்பட்டினம் பகுதியில் 80 மி.மீ , காரைக்காலில் 53 மி.மீ, கடலூரில் 38 மி.மீ, சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ, புதுச்சேரியின் இரு பகுதிகளில் 67 மற்றும் 61 மி.மீ, சென்னை (செங்கல்பட்டு) - 48.5 மி.மீ ,சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 46.5 மி.மீ, கட்டப்பாக்கம் கேவிகே (காஞ்சிபுரம்) - 40 மி.மீ , சென்னை எண்ணூர் துறைமுகம் 25.5 மி.மீ ,சோழிங்கநல்லூர் 43.2 மி.மீ என மழை அளவு பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: world diabetes day 2023: சர்க்கரை நோய் ஒரு தண்டனை அல்ல.. வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே போதும்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.