ETV Bharat / state

வேட்புமனுக்களை கவனமுடன் பெறுங்கள்- உயர்நீதிமன்றம் அறிவுரை - சென்னை உயர்நீதிமன்றம்

வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Verify the candidate nomination papers very carefully,HRC order

author img

By

Published : Mar 12, 2021, 4:41 PM IST

சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் வயது, வாக்கு இடம்பெற்றுள்ள தொகுதியின் பெயர், எண், வாக்காளர் பட்டியலில் உள்ள எண் மற்றும் வருமானம், சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, கல்வி விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
ஆனால், 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. அந்த வேட்புமனுக்கள் முறையற்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி எம்பி ஆ.ராசா, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே முறையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுக்களை முறையாக தாக்கல் செய்யாத எம்பிக்களுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும், வேட்புமனுக்கள் முறையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களில் தொகுதி எண்கள் சரியாக குறிப்பிடவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், மனுதாரர் குறிப்பிடும் குறைபாடுகள் நிவர்த்தி செய்த பின் தான் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுக்களை பெறும் போது, தேர்தல் ஆணையம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்" என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.