ETV Bharat / state

'எனக்கு கரோனா இருந்தபோதே கதாநாயகியுடன் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது': பகீர் கிளப்பிய அசோக் செல்வன்

author img

By

Published : Mar 22, 2022, 5:16 PM IST

'மன்மத லீலை' ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அசோக் செல்வன், தனக்கு கரோனா இருந்தபோதே கதாநாயகியுடன் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது. இருப்பினும் நடிகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பேசினார்.

அசோக் செல்வன்
அசோக் செல்வன்

சென்னை: ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் பிரேம்ஜி இசையில், அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மன்மத லீலை. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று (மார்ச் 21) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சிங்காரவேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டனர்.

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவா, "நடிகர் சங்கம் இல்லை என்று ஒரு குறையாக இருந்தது. இந்த நேரத்தில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். துணைத்தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற பூச்சி முருகன் திரைத்துறைக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும். நடிகர் சங்கத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்" என்று கூறினார்.

'மன்மத லீலை' ட்ரைலர் வெளியீட்டு விழா
'மன்மத லீலை' ட்ரைலர் வெளியீட்டு விழா

தொடர்ந்து பேசிய அவர் 'ஏ' சான்றிதழ் பொதுவாக வன்முறை, ஆபாசம் அதிகம் இருக்கும் படங்களுக்கு வழங்கப்படும். ஆனால் மன்மத லீலை திரைப்படம் அவ்வாறு இருக்காது. குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். நடிகர் அசோக் செல்வன் நன்றாக நடித்துள்ளார் என்றார்.

சர்ச்சையாக பேசிய அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், "2007ஆம் ஆண்டு என்னுடைய பொதுத் தேர்வு முடிந்த பிறகு சென்னை 28 படத்தை, நண்பர்களுடன் சென்று பார்த்தேன். வெங்கட் பிரபு இயக்கத்தில் நான் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. படப்பிடிப்புக்கு நடுவே எனக்கு கரோனா வந்தது. கரோனா இருந்தபோதே அச்சமயத்தில் கதாநாயகியுடன் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது. இருப்பினும் நடிகைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மன்மத லீலை படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

'மன்மத லீலை' ட்ரைலர் வெளியீட்டு விழா
'மன்மத லீலை' ட்ரைலர் வெளியீட்டு விழா

படத்திற்கு இசையமைத்துள்ள நடிகர் பிரேம்ஜி கூறுகையில், குடும்பத்தோடு பார்க்கும் படமாக இது இருக்கும். கல்யாணம் முடிந்தவர்கள் பார்க்க வேண்டிய படம் இது என்றும் கூறினார்.

எனக்கும் பெண் குழந்தைகள் உண்டு: அப்படி எடுக்க மாட்டேன்

படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியபோது, "என் உதவி இயக்குநர் இந்த கதையை என்னிடம் கொடுத்தார். உதவி இயக்குநர் கதையை முதன்முறையாக நான் இயக்கி உள்ளேன். 'அடல்ட்' திரைப்படம் என்று கூட கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க நகைச்சுவையான படம்.

18வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த படத்தை பார்க்க வர வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த படம் பார்க்க வேண்டாம். 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டாலும், ஆபாசம் இதில் இருக்காது. நானும் அப்படி எடுக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். படத்தை படத்தைப்போல் பார்த்து ரசிக்க வேண்டும். படத்தில் என் தந்தை கங்கை அமரன் ஒரு பாடல் எழுதியுள்ளார். திரையரங்கில் படம் பார்த்து மகிழுங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' தனியிசைப் பாடல் தொடர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.