ETV Bharat / state

ஆவடி அருகே தனியார் கல்லூரி மாணவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

சென்னை: ஆவடியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி
ஆவடி
author img

By

Published : Feb 25, 2020, 2:59 PM IST

சென்னையில் ஆவடி அருகே வீராபுரத்தில் தனியார் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதில் கலைக் கல்லூரியில் மாணவன் சுதர்சனம் பி.காம். மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

இவர், கல்லூரி மூன்றாம் தளத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

மேலும், மாணவர் சுதர்சனம் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கல்லூரி நிர்வாகம் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவித்திருந்தது. இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆர்மி பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.