சென்னை: இயக்குநர் அமீர், எஸ்டிபிஐ பொதுச் செயலாளர் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த தூண்டியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தமிழ்நாடு பிரச்சார ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவர் வேலூர் இப்ராகிம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார்.
அவர், நபிகள் நாயகம் குறித்து பேசிய கூட்டத்தில் நானும் கலந்துகொண்டதாக இயக்குநர் அமீர், எஸ்டிபிஐ கட்சியினர் பொய்யான தகவலைத் தெரிவித்துவருகின்றனர். அந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவிருந்தேன். காவல்துறையினர் என்னை தடுத்து நிறுத்தினர்.
மதக்கலவரத்தை தூண்டும் நோக்கோடு இயக்குநர் அமீர், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பரூக் செயல்படுகின்றனர்.
இவர்களின் தூண்டுதலின்பேரில் தாளவாடி, கொடைக்கானல், ஜிபி சாலை ஆகிய இடங்களில் என்மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து பேசியது தவறுதான், அதற்காக காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.
என்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தத்தூண்டிய இயக்குநர் அமீர், எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் உமர் பரூக் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், எனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: பாதுகாப்பு வழங்க பாஜக ஆதரவாளர் வேலூர் இப்ராஹிம் கோரிக்கை