ETV Bharat / state

பாலத்தில் கயிறு கட்டி உடலை இறக்கிய விவகாரம்: நாளை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - vellore dead boy

சென்னை: வேலூரில் பாலத்தில் கயிறு கட்டி இறக்கப்பட்ட குப்பனது உடல் சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டதா என ஆட்சியர் நாளை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

chennai HC
author img

By

Published : Aug 28, 2019, 4:33 PM IST

வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் பகுதியில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த குப்பன், ஆகஸ்ட் 19ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆகஸ்ட் 20ஆம் தேதி குப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்து செல்ல அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியிலிருந்த ஒரு மேம்பாலத்திலிருந்து உடலை கயிறு கட்டி கீழே இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் கொண்டு வந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், ஆகஸ்ட் 26ஆம் தேதி பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், குப்பன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் மயானத்திற்கான பாதை மறிக்கப்பட்டு மேம்பாலத்திலிருந்து இறக்கி அவரது உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என வேலூர் மாவட்ட ஆட்சியர் நாளை பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Intro:Body:

Flash

வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த குப்பன் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மயானத்திற்கான பாதை மறிக்கப்பட்டு மேம்பாலத்தின் இருந்து இறக்கி அவரது உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என வேலூர் மாவட்ட ஆட்சியர் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.