ETV Bharat / state

வேல் யாத்திரை தடை வழக்கு: நாளை விசாரணை - சட்டம்-ஒழுங்கு பிரச்சனை

சென்னை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை (நவ. 05) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

vel yatra stay case hired tomorrow
vel yatra stay case hired tomorrow
author img

By

Published : Nov 4, 2020, 1:23 PM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது. அந்த ஊரடங்கு தற்போது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தகுந்த இடைவெளி பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச், சேர்ந்த பத்திரிக்கையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தும் போது மூன்று ஆயிரம் முதல் ஐந்தாயிரம் பேர் கூட இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இந்து பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதுபோல் தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்.

யாத்திரை முடியும் நாளான டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். அதன் காரணமாகவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செந்தில்குமாரின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.