ETV Bharat / state

சென்னையில் கேட்பாரற்றுக்கிடந்த வாகனங்கள் பறிமுதல்; வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

ஒருநாள் சிறப்புப்பணிகள் மேற்கொண்டு சென்னையில் சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்துள்ள மற்றும் உரிமை கோராமல் கேட்பாரற்றுக்கிடந்த 1,027 வாகனங்கள்பறிமுதல் செய்யப்பட்டு, 56 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
author img

By

Published : Oct 31, 2022, 7:43 PM IST

சென்னை காவல் துறையினர், ஒருநாள் சிறப்புப்பணிகள் மேற்கொண்டு சென்னையில் சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்துள்ள மற்றும் உரிமை கோராமல் கேட்பாரற்றுக்கிடந்த 1,027 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு விவரங்கள் சேகரித்து 56 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, 490 வாகனங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை மேற்கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதன்பேரில் நேற்று(அக்.30) ஒரே நாளில் சென்னையில் கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத வாகனங்கள் மீது ஒரு நாள் சிறப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில் சாலையோரங்களில் நிறுத்தியிருந்த 254 வாகனங்கள், வாகன நிறுத்துமிடங்களில் 122 வாகனங்கள் மற்றும் இதர இடங்களில் 52 வாகனங்கள் என நீண்ட நாட்கள் நிறுத்தியிருந்த உரிமை கோராத மற்றும் கேட்பாரற்றுக்கிடந்த 368 இருசக்கர வாகனங்கள், 30 ஆட்டோக்கள் மற்றும் 30 இலகுரக வாகனங்கள் மொத்தம் 428 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும், ஏற்கெனவே கேட்பாரற்று உரிமை கோராமல் இருந்த 522 இருசக்கர வாகனங்கள், 25 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 558 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

890 இருசக்கர வாகனங்கள், 55 ஆட்டோக்கள் மற்றும் 41 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 986 வாகனங்களின் பதிவு எண்களைக்கொண்டு அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் ஏதேனும் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு, 38 இருசக்கர வாகனங்கள் 2 ஆட்டோக்கள் மற்றும் 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், உரிமைகோராத முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத 465 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 ஆட்டோக்கள் என மொத்தம் 490 வாகனங்கள் கு.வி.மு.ச. பிரிவு 102இன் கீழ் கைப்பற்றப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதர வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல, போக்குவரத்து காவல் அலுவலர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று சிறப்பு சோதனை மேற்கொண்டு சென்னையில் கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத 10 இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள் மற்றும் 21 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஏற்கெனவே உரிமை கோராத 6 இருசக்கர வாகனங்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

16 இருசக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள் மற்றும் 21 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 41 வாகனங்களின் விவரங்கள் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு 2 இலகுரக வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதர வாகனங்கள் விசாரணை மேற்கொண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 5 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மோபிர் பாலம் - தரச் சான்றிதழ் பெறப்பட்டதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.