ETV Bharat / state

கட்டுக்குள் வந்த காய்கறி விலை - சென்னை காய்கறி சந்தை

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாள்களாக உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.

கட்டுக்குள் வந்த காய்கறி விலை
கட்டுக்குள் வந்த காய்கறி விலை
author img

By

Published : Mar 31, 2020, 7:14 PM IST

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறிகளை வாங்கி சேமித்துக் கொண்டதால் கடந்த வாரத்தில் அவற்றின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது அவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.

கட்டுக்குள் வந்த காய்கறி விலை
கட்டுக்குள் வந்த காய்கறி விலை

சென்னையில் உள்ள மொத்த விலை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 15, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகற்காய், புடலங்காய், கேரட், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகள் 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட் ஆகியவை 30 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குடை மிளகாய், பச்சை மிளகாய் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக பீன்ஸ் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கட்டுக்குள் வந்த காய்கறி விலை
இருப்பினும் சந்தைகளில் வாங்கி குடியிருப்புப் பகுதிகளில் சிறு கடைகளிலும், தள்ளு வண்டிகளிலும் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: குடும்ப உறவை வலுவாக்குங்கள் - கரோனா கொடுத்த பொன்னான வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.