சென்னை : தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில்,காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, முதல் ரக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கேரட் கிலோ 50 முதல் 70 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 30 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மேலும் ,அவரைக்காய் 40 முதல் 75 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்தால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.