ETV Bharat / state

பெரியார் சிலை மீது காக்கி பெயிண்ட் வீச்சு: கீ.வீரமணி கண்டனம்!

சென்னை: தேர்தல் நடைபெற்று வரும் சமயத்தில் ராஜபாளையத்தில் உள்ள பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காக்கி பெயிண்ட்டை ஊற்றியது கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சி என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி
author img

By

Published : Apr 18, 2019, 10:25 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காக்கி பெயிண்ட்டை ராஜபாளையத்தில் உள்ள பெரியார் சிலையின் மீது உற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி கூறுகையில், "கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு ராஜபாளையத்தில் உள்ள பெரியாரின் சிலை மீது காக்கி பெய்ண்டை ஊற்றியுள்ளனர்.

இதே போன்று அறந்தாங்கியில் பெரியாரின் சிலையின் தலையை துண்டித்து கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அது நடந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், இன்னமும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. சிலைக்கு தலையை மட்டும் ஒட்டவைத்து பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் மட்டும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.