ETV Bharat / state

சீமானை சண்டைக்கு கூப்பிடும் வீரலட்சுமி..! தயார் நிலையில் மைதானம்..! - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பாக்ஸிங்கிற்கு வரும்படி வீரலட்சுமி சவால் விட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:37 PM IST

வீரலட்சுமியின் வைரல் வீடியோ

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்த நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி பேசி வந்தார். 2011ஆம் ஆண்டு சீமான் மீது புகார் அளித்திருந்த விஜயலட்சுமி மீண்டும் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய நடிகை விஜயலட்சுமி கடந்த வாரத்தில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது விஜயலட்சுமி விவகாரம் முடிந்த நிலையில் தற்போது சீமானுக்கு வீரலட்சுமிக்கு காரசாரமாக சவலாகள் மற்றும் பதில்கள் இணையத்தில் பரவிக்கொண்டு வருகிறது.

மேலும் சீமான் அண்மையில், வீரலட்சுமை பற்றி பேசி வந்துள்ளார். அப்போது, வீரலட்சுமியின் கணவருடன் பாக்ஸிங் செய்ய தயார் என கூறிய சீமானுக்கு, இடத்தை தேர்வு செய்து தேதியும் குறித்து நாங்க ரெடி என கூறியிருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாக நான் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வேன். ஆனால், உங்களது இழிவான பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.

எனது கணவர் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் தொடர்புக் கொண்டபோது சீமானிடம் தனக்கு உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. உங்களால் என் எதிரில் நிற்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா? ஊடகவியளரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து நிற்க சொல்லுங்கள் என்று எனது கணவரை கூறியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சுமார் ஒரு மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் எனது கணவர்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம். இங்குதான் பாக்சிங் செய்வதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளேன். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் சண்டை நடக்க போகிறது.

இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என இதில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இதில் தோற்பவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டியின் மூன்று நாள்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்" என்று அதில் பேசப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.