ETV Bharat / state

அதே நீதிமன்ற அமர்வுதான் வேண்டும் - அடம் பிடிக்கும் வேதாந்தா குழுமம் - Vedanta Group requests to Vedanta Group requests Same Session judges to list Sterlite cases

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hc
author img

By

Published : Sep 27, 2019, 7:55 PM IST

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளும், ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ, பேராசிரியை பாத்திமா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரையில் 28 நாட்கள் விசாரிக்கப்பட்டது.

இதற்கிடையே நீதிபதி சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். அத்துடன் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி தாரணி அமர்வு விசாரிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கின் வாதங்கள் முடிந்து தீர்ப்பை ஒத்திவைக்க இருந்த நிலையில், வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம், அரசு துறைகள் ஆகியோர் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அந்த கடிதம் பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஸ்டெர்லைட் வழக்கு குறித்து அவர் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.

Intro:Body:ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம், அரசு துறைகள், ஆட்சேபை மனுதாரர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளும், ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜு, பேராசிரியை பாத்திமா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில் ஜூன் 20 விசாரிக்க தொடங்கி ஆகஸ்ட் 30 வரையில் 28 நாட்கள் விசாரிக்கப்பட்டது.

இதற்கிடையே சுழற்சி முறை மாற்றம் அடிப்படையில் நீதிபதி சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். அத்துடன் ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி தாரணி அமர்வு விசாரிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, நிர்வாக உத்தரவை பிறப்பித்தார்.

வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்க இருந்த நிலையில், வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட்டதால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்விலேயே பட்டியலிடும்படி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க முடிவெடுத்த வேதாந்தா குழுமம், இத்தொடர்பாக கோரிக்கை மனுவை தயார் செய்து, அதில் அரசு தரப்பிலும், ஆட்சேபனை மனுதாரர்கள் தரப்பிலும் சம்மதம் பெற்றுள்ளது.

அனைத்து தரப்பிலும் கையெழுத்திடப்பட்டுள்ள கடிதம் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த கடிதம் பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஸ்டெர்லைட் வழக்கு குறித்து அவர் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.