ETV Bharat / state

8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க விசிக வலியுறுத்தல்! - விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை: சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

VCK statement on 8 way road issue
VCK statement on 8 way road issue
author img

By

Published : Dec 9, 2020, 6:50 AM IST

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் ஒப்புதலின்றி சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிலம் கையகப்படுத்த வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குத் தடைவிதிக்க முடியாது என்று கூறிவிட்டது.

மத்திய அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

மத்திய அரசு விரும்பினால் மீண்டும் புதிதாக ஒரு அரசாணையைப் பிறப்பிக்கலாம் அதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதியை அது பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்படைப்பது மட்டுமின்றி மீண்டும் அங்கே நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது.

எட்டு வழிச்சாலை உள்ளிட்ட எந்தவொரு திட்டத்துக்கும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களுடைய நிலத்தை மத்திய அரசு அபகரிப்பதற்குத் தமிழ்நாடு அரசு துணைபோகக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு - 8 மாதம் கழித்து ஒப்புதல் அளித்த ஆளுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.