சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மே4) செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை குழு தலைவர் சிந்தனை செல்வன், "திமுக அரசை ஆன்மிகவாதிகளுக்கு எதிரான அரசு என சித்தரிக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. திமுக அரசு மதசார்பற்ற அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சனாதன ஆன்மிகம், இந்துமதவாதத்தில் இருந்து விலகி நின்று சீர்திருத்த மரபோடு பேசக்கூடிய வழியில் தமிழர்களின் மெய்யறிவு மரபை பாதுகாக்கின்ற வகையில் சமணம், பௌத்தம் மற்றும் சனாதன சாதி சடங்குகளை பின்பற்றாத ஆதிதிராவிடர் மக்கள் வழிபடக்கூடிய கோயில்களை இணைத்து தமிழர்களின் மெய்யறிவு அறநிலையத்துறை ஒன்றை புதிதாக உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தருமபுர ஆதீனத்தின் மனிதர்களை பல்லாக்கில் தூக்கும் விவகாரத்தில் ஆதீனத்துடன் பேசி நல்ல முடிவை முதலமைச்சர் எடுப்பார்" - அமைச்சர் சேகர் பாபு!