இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் கலந்தாய்வு கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து வருகின்ற 23ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்த உள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புக்கும், மதச்சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது.
இந்தியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று சொத்தை வாதத்தை பாஜக அரசு வைக்கிறது. தேசியக் குடியுரிமையை நடைமுறைப்படுத்த இந்த சட்டம் தேவைப்படுகிறது. அதன் பின்னர் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதிமுக, பாமக ஆதரவளித்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கு இந்த இரு கட்சிகளும் துரோகம் இழைத்துள்ளது. அரசு பின்வாங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும், மேலும் இது பற்றி பரவி இரண்டாவது சுதந்திர போராக மாறும் என்றார்.
இதையும் படிங்க: மதசார்பற்ற நாட்டை பிளவுப்படுத்த முயற்சி - மாணவர்கள் கண்டனம்