ETV Bharat / state

போராட்டங்களை திசை திருப்பவே சிலர் கருத்து கூறுகின்றனர்: திருமாவளவன் - குடியரசுத் தலைவர் பங்கேற்ற விழா

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என நடக்கிற போராட்டங்களை திசை திருப்புவதற்காகவே சிலர் கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck-leader-thirumavalavan-about-caa-protest-in-india
vck-leader-thirumavalavan-about-caa-protest-in-india
author img

By

Published : Dec 25, 2019, 10:48 PM IST

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' அன்பும், கருணையும் மக்களை இணைக்கும் வலிமை பெற்றவை. தனி மனித, உலக மனித அமைதியை அன்பு, கருணை கொண்டுதான் கட்டமைக்க முடியும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறிக்கொள்கிறேன்.

இந்த மண்னில் மதம், சாதி பெயர்களால் மக்களைக் கூறுபோடும் முயற்சிகள் அதிகார ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் கொடியது. இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கட்சிகள் மட்டுமில்லாமல், கட்சிகளை சாராதவர்களாலும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் நாளை எழுத்தாளர்கள், கலைஞர்கள் கட்சி சார்பற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரான சட்டம் என்று கருத முடியாது. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரான சட்டம். சட்டத்தைத் திரும்பபெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையான ஒன்று.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டும் என்றே சர்ச்சையானக் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மணியம்மையாரை கொச்சைப்படுத்த பாஜக-வின் ட்விட்டர் பக்கத்தில் மோசமானக் கருத்தை பதிவிட்டுள்ளனர். இதுவும் போராட்டத்தை திசை மாற்றத்தான் திட்டமிட்டு செய்கிறார்கள்.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் பங்கேற்ற விழாவில் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவியை அவமதிக்கும் வகையில் ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். குடியரசுத் தலைவர் சென்றபின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி தங்கப்பதக்கத்தை திருப்பியளித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் ஜெர்மனி மாணவர் பங்கேற்றார் என்பதற்காக அவரை ஜெர்மனிக்கே இந்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்நடவடிக்கை இருக்கும் என்று தெரிந்தும் ஜெர்மனி மாணவர், ஜனநாயகத்தை காக்க துணிச்சலுடன் போராடியுள்ளார். ஜனநாயக உரிமைக்காக எந்த மண்ணிலும் போராடுவோம் என்று சே குவேராவின் வழியை பின்பற்றிய ஜெர்மனி மாணவரை விடுதலை சிறுத்தைகள் பாராட்டுகிறது'' என்றார்.

இதையும் படிங்க: இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமில்லை - ஆ.ராசா

Intro:Body:சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அன்பு, கருணை மக்களை இணைக்கும் வலிமை பெற்றவை. தனி மனித, உலக மனித அமைதியை அன்பு, கருணை கொண்டு தான் கட்டமைக்க முடியும்.

இந்த மண்னில் மதம், ஜாதி பெயரால் மக்களை கூறு போடும் முயற்சிகள் அதிகார ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் உருவாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
இயேசுவின் போதனைகளை படித்து அனைத்து மதங்கள், மொழியை சேர்ந்தவர்கள் வேறுபாடுகள் கொண்டவர்களும் அன்பு, கருணையால் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக மனித குலத்திற்கே இயேசு அருளிய போதனை. இந்திய மக்களாகிய நாமும் கடைபிடித்து அமைதியாகவும் நல்லிணக்கத்துடன் இந்த மண்ணில் இணைந்து வாழ்வோம்.

குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் கொடியது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கட்சிகள் மட்டுமில்லாமல் கட்சிகளை சாராத ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நாளை எழுத்தாளர்கள், கலைஞர்கள் கட்சி சார்பற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர். முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரான சட்டம் என்று கருதமுடியாது. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரான சட்டம். சட்டத்தை சிதைக்கிற சட்டம். சட்டத்தை திரும்ப பெறுகிற வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவது தேவையான ஒன்று.

அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தர வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டும் என்றே கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இது போன்ற கருத்துகளால் போராட்டத்தை திசைதிருப்ப முடியாது. இது அதிகமான பாதிப்பை ஜனநாயக சக்திகளை திசை திருப்ப முடியாது. அவர்களின் கருத்துகளுக்கு யாரும் செவி ஏற்க தேவையில்லை. மணியம்மையாரை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வின் டுவிட்டரில் மோசமான கருத்தை பதிவிட்டு உள்ளனர். இதுவும் போராட்டத்தை திசை மாற்ற தான் திட்டமிட்டு செய்கிறார்கள். இதற்கு பதில் சொல்வதாக சமூகவலைதளத்தில் சக்தியை விரையம் செய்ய வேண்டாம். பா.ஜ.கவின் அருவருப்பான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

புதுச்சேரியில் ஜனாதிபதி பங்கேற்ற விழாவில் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மாணவியை அவமதிக்கும் வகையில் ஒரு இடத்தில் அடைத்து வைத்து உள்ளனர். ஜனாதிபதி சென்றபின் சான்றிதழ் வழங்கி உள்ளார். அந்த மாணவி தங்கப்பதக்கத்தை திருப்பி அளித்து உள்ளார். இஸ்லாமியர்கள் கொச்சைப்படுத்தும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.

குடியுரிமை திருத்த சட்டம் போராட்டத்தில் ஜெர்மனி மாணவர் பங்கேற்றார் என்பதற்காக அவரை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பி இருப்பது கண்டிக்க கூடியது. எதிர் நடவடிக்கை இருக்கும் என்று தெரிந்தும் ஜெர்மனி மாணவர் ஜனநாயகத்தை காக்க துணிச்சலுடன் போராடி உள்ளார். ஜனநாயக உரிமைக்காக எந்த மண்ணிலும் போராடுவோம் என்று சேக்குவாராவின் வழியை பின்பற்றிய ஜெர்மனி மாணவரை பாராட்டுகிறோம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.