சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெகாசஸ் உளவு செயலி மூலம் ஒட்டுக்கேட்கும் விவகாரத்தில் நீதிக்குப் புறம்பாக செயல்பட்ட இந்திய உள்துறையின் முன்னாள் செயலாளர்கள், பெகாசஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
அதற்கு பதிலளித்துள்ள அட்டர்னி ஜெனரல், இந்தப் பிரச்னை நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலும், குற்றம் நடந்திருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியாததாலும் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி வழங்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.
எனவே பெகாசஸ் விவகாரத்தில் நேரடியாக வழக்கு தொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு... தந்தைக்கு பறிபோன விளம்பர வாய்ப்பு.