சென்னை: தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிபோல் அண்ணா பல்கலைக் கழகத்திலும் மேற்கொள்வதற்காக 11 துறைகளில் புதியதாக ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட ஆட்சிமன்றக்குழுவின் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களின் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
பல்வேறு ஆராய்ச்சி மையங்கள்
ஆட்டோ மொபைல் தொழில்நுட்பம், ரோபாேடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், இண்டர்நெட் திங்க்ஸ், வெவிக்கல் தொழில்நுட்பம், சைபர் செக்கியூரிட்டி , ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகள், போஸ் ஐன்ஸ்டீன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை ஆராய்ச்சி மையம் , லிபிரியல் ஆரட்ஸ் பார் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம், வயர்லஸ் சிஸ்டம் டிசைன், மல்டி டிஸிபிலினரி சிஸ்டம் , எனர்ஜி ஸ்டோரேஜ் தொழில்நுட்பம் ஆகிய 11 பிரிவுகளில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களை அதிகளவில் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை ஒன்றிய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடி, என்ஐடி போன்றவற்றிக்கு இணையாக வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.