திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வசந்த குமார், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமத் ஜான் ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே தலைமையகத்தில், மேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, 'ஆர்.கே.நகர் குறுக்கு பேட்டை ரயில்வே கேட் அருகில் சாலை நெரிசல் அதிகமாக உள்ளதால், அதன் மேல் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தோம் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமத் ஜான், 'வாலாஜா சாலை ரயில் நிலையம் மிகவும் முக்கியமானது. ஆனால் எந்த முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றது. இதில் மேலும் பல ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மக்களவை உறுப்பினர் வசந்த குமார், ' கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும். ரயில் நிலையங்கள் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.