சென்னை: பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக நேற்று (செப்.25) அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் எனவும், வரப்போகிறது எனவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், வி.சி.க, திமுக உடன்தான் கூட்டணி என்று வன்னி அரசு தனது "X" பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
#எச்சரிக்கை
— வன்னி அரசு (@VanniKural) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல
பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா?
புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,
பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் @thirumaofficial… pic.twitter.com/kfaG1wV4fI
">#எச்சரிக்கை
— வன்னி அரசு (@VanniKural) September 26, 2023
திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல
பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா?
புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,
பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் @thirumaofficial… pic.twitter.com/kfaG1wV4fI#எச்சரிக்கை
— வன்னி அரசு (@VanniKural) September 26, 2023
திமுக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களை போல
பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா?
புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார்,
பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் @thirumaofficial… pic.twitter.com/kfaG1wV4fI
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ‘X’ வலைத்தளப் பதிவில், "திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போன்று பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி வி.சி.க தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ, அப்படித்தான் ஆட்சி அதிகாரத்திலிருந்து கொண்டே களமாடி வருகிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும், சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனாலதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.
இதையும் படிங்க: “நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டியடிக்க வேண்டும்” - உதயநிதி ஸ்டாலின்
கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்டபோதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம். ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.
இச்சூழலில், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தவுடன், விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் எனவும், வரப்போகிறது எனவும், கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், அரசியல் புரோக்கர்கள். பாஜகவை, அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சரியாகப் புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Thirumavalavan : திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?