ETV Bharat / state

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போதிய பேட்டரி கார்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பயண்பாட்டிற்கு இயக்கப்படும் பேட்டரி கார்கள் போதியளவில் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் பூங்காவில் இருந்து வெளியேறுகின்றனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போதிய பேட்டரி கார்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் போதிய பேட்டரி கார்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
author img

By

Published : Oct 25, 2022, 8:52 PM IST

சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலே மிகப்பெரிய விலங்குகள் பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன.

இந்நிலையில் விடுமுறை நாள்களில் அதிகமான பார்வையாளர்களுடனும், வேலை நாள்களில் கணிசமான பார்வையாளர்களுடன் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போதிய பேட்டரி கார்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் குடும்பத்துடன் வருபவர்கள் மற்றும் நடந்து செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பூங்காவை நடந்து சுற்றி பார்க்க தனி கட்டணம் செலுத்தி செல்லும் வகையில் 15 பேர் பயணிக்க கூடிய பேட்டரி கார் சேவை இயக்கப்படுகிறது.

இதணால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்தோடு வருபவர்கள் பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார்களை எதிர்பார்த்து உள்ளனர்.

எனவே பேட்டரி கார்கில் செல்வதற்கான டோக்கன்களை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து இருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அவதி: மேலும் பேட்டரி கார்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் தான் இயக்கப்படுகிறது. மேலும் ஒன்பது பேட்டரி கார்கள் மட்டுமே பூங்காவில் இயக்கப்படுவதால் சரியான நேரத்தில் வாகனம் கிடைக்காமலும், போதிய வாகனங்கள் இன்றியும் பார்வையாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் பயணசீட்டு வாங்க வெகு மணி நேரம் வரிசையில் காத்திருந்த பின்னர் திடீரென அனைத்து வாகனங்களும் நிரம்பிவிட்டதாகவும் , வேறு வாகனங்கள் இல்லையென்றும் கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் பார்வையாளர்கள் அதிருப்தியில் பூங்காவில் இருந்து வெளியேறுகின்றனர்.இந்த செயல் பார்வையாளர்களிடையே வெறுப்பை உண்டாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மதுரையில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த பார்வையாளர் துரை கூறுகையில், நாங்கள் மதுரையில் இருந்து குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வந்து உள்ளோம். வார இறுதி நாட்கள் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. எங்களால் நடந்து செல்ல முடியாததால் பேட்டரி வாகனங்களுக்கான டிக்கெட் எடுக்க பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றோம்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்லாயிரம் கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் வெறும் 9 பேட்டரி வாகனங்கள் மட்டும் இயக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை வெரும் 5 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். வார இறுதி நாட்களில் 9 பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயணிகளுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி கார்கள் போதுமானதாக இல்லை எனவும் குறைந்த பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுவதால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் ஏற்படுகிறது.

பூங்கா முழுவதும் நடந்து சென்று சுற்றி பார்க்கும் நேரமும் பேட்டரி கார்களுக்காக வரிசையில் இருக்கும் நேரமும் ஒன்றாகவே உள்ளது. எனவே மக்கள் சிரமத்தை போக்க கூடுதல் பேட்டரி வாகனங்களை அனைத்து தினங்களும் இயக்க வேண்டும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் எனவும், கூடுதலாக குறைந்தது 20 முதல் 30 வரையிலான பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பார்வையாளர் பிரியா கூறுகையில், உயிரில் பூங்காவில் பல பேட்டரி கார்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து அலுவலர்களிடம் கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வார இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர் அவர்கள் பயன்பாட்டிற்காக சுமார் 20 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட பேட்டரி கார்கள் பழுதடைந்ததால் அதனை சரி செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.

மேலும் புதிய பேட்டரி கார்களை வாங்குவது குறித்தும் அல்லது தனியாக நிறுவனங்களில் இருந்து வாடகைக்கு எடுப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம் இது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றது.

இதனை தவிர்ப்பதற்காக கூடுதல் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வண்டலூர் பூங்காவில் டிக்கெட் முன்பதிவு செய்வதையும், வாகனங்கள் பார்க்கிங் செய்வதையும் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சமீப நாட்களுக்கு முன்பு நாட்டில் சிறந்த உயிரில் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கேயும் பல்வேறு குறைகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருப்பது அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழிவறைகள், குடிநீர் வசதிகள் சரியில்லை என்று ஈடிவி பாரத்தில் செய்திகள் வெளியான நிலையில் அதனை பூங்கா நிர்வாகம் சரி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தங்கக்கவசம் தேவரின் பசும்பொன் நினைவாலயம் செல்லுமா? - தென்மாவட்டங்களில் எகிறும் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.