மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 20 வரை ஆன்லைன் மூலமாக யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக அதில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரிக்கைவைத்துள்ளனர். ஆனால் அவர் தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
-
இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு
— வைரமுத்து (@Vairamuthu) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.#yoga
">இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு
— வைரமுத்து (@Vairamuthu) August 22, 2020
இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.#yogaஇந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு
— வைரமுத்து (@Vairamuthu) August 22, 2020
இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.#yoga
இது குறித்து, ட்வீட் செய்துள்ள கவிஞர் வைரமுத்து, “இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா? அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா? என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க...'இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ?'