ETV Bharat / state

“கோவிந்தா..கோவிந்தா” முழக்கத்துடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு! - மார்கழி

Vaikunta Ekadasi at Parthasarathy Temple: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 'கோவிந்தா, நாராயணா..' என விண்ணை முட்ட பக்தர்கள் எழுப்பிய கோஷங்களுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Vaikunta Ekadasi at Parthasarathy Temple
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்கவாசல் திறப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 11:05 AM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல வைணவ கோயில்களில், ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். ஆனால் அவை எல்லாவற்றையும் விட, மார்கழி மாதத்தில் 20 நாட்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன் படி, தமிழகத்தில் பல்வேறு வைணவத் கோயில்களில், இன்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு “சொர்க வாசல்” திறக்கபட்டது.

பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு: சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ளது 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றானது பார்த்தசாரதி கோயில். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பாக உள்ளது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் இந்த தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். மேலும், இங்குள்ள மூலவர் திருமேனியே கிருஷ்ணர் சொரூபம் என்று கருதப்படுகிறது.

நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணர், அமர்ந்த கோலத்தில் தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்த கோலத்தில் மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர் ஆகிய மூன்று நிலைகளுமே இந்த கோயில்களில் இருப்பது தனிச்சிறப்பாக உள்ளது. இன்று (டிச.23) இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா கோவிந்தா” என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கிராமம்…நிலைகுலைந்து நிற்கும் சொக்கப்பழங்கரை கிராம மக்கள்..

காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகளை நடைபெற்றது. பிறகு வசந்த மண்டபத்தில் உற்சவரை வைத்து, ஆண்டாள் பாசுரத்தை வைணவ அடியார்கள் பாடினார்கள். இதைத்தொடர்ந்து பிரகாரத்தைச் சுற்றிவந்த சுவாமி, காலை சரியாக 4.30 மணியளவில், மேளதாள முழக்கத்துடன், பக்தர்களின் 'கோவிந்தா..கோவிந்தா..எம்பெருமானே..நாராயணா..' என விண்ணை முட்ட கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்த்து, பரமபத வாசல் வழியாக பார்த்தசாரதி பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சிறப்பு ஏற்பாடுகள்: கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு காலை 6 மணி முதல் இரவு நடைமூடும் வரை பொது தரிசனம் தான் கடைபிடிக்கப்பட இருக்கிறது. மேலும், இன்று சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுகான மருத்துவ வசதி போன்றவை செய்யபட்டுள்ளன. மேலும், இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், பின் சொர்க வாசலை வழிப்பட்டனர்.

இதே போல், கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயில், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில், அரியலூர் கோதண்டராமசாமி கோயில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள், நாமக்கல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடைவரை கோயிலான அரங்கநாதர் கோயில், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டான் இடர்தவிர்த்த பெருமாள், சேத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு..வானைப் பிளந்த 'கோவிந்தா..கோவிந்தா' கோஷம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.