சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் 61ஆவது திவ்யதேசமாகும். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விமரிசையாகக் கொண்டாடப்படும். அதன்படி, இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் பார்த்தசாரதி உற்சவர் மகா மண்டபத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளினார்.
அதன்பின், அதிகாலை 4 மணிக்கு உற்சவர் பார்த்தசாரதி மகா மண்டபத்திலிருந்து புறப்பட்டுச் சென்று, 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வருகைபுரிந்தார். சொர்க்கவாசல் திறப்பைக் காண அங்கு குவிந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என கோஷத்துடன் பார்த்தசாரதியை தரிசனம் செய்தனர்.
இன்றிலிருந்து பார்த்தசாரதி திருவாய்மொழி மண்டபத்தில் வைக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வரும் பக்கதர்களுக்கு வரும் 16ஆம் தேதிவரை காட்சியளிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: சேலத்திலிருந்து 4 டன் பூக்கள்!